;
Athirady Tamil News

ஒரே குடும்பத்தில் 3 பேர் எம்.எல்.ஏ.வாக தேர்வு

0

புதுச்சேரி,

புதுவை மற்றும் தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. இதில் புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதியில் தொழிலதிபர் மார்டினின் மகன் ஜோஸ் சார்லஸ் மார்டின் தேசிய ஜனநாயக கூட்டணியில் தனது கட்சியான எல்.ஜே.கே. சார்பில் போட்டியிட்டார். இதில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் தேவதாசைவிட 10 ஆயிரம் ஓட்டுகள் கூடுதல் பெற்று அபார வெற்றி பெற்றார்.

அதுபோல் தமிழக சட்டசபை தேர்தலில் லால்குடி தொகுதியில் அ.தி.மு.க.சார்பில் போட்டியிட்ட ஜோஸ் சார்லஸ் மார்டினின் தாய் லீமாரோஸ் மார்டின் தன்னை எதிர்த்து போட்டியிட்ட தி. மு.க. வேட்பாளர் பாரிவள்ளலை விட 5230 கூடுதல் ஓட்டுகள் பெற்று வெற்றி வாகை சூடினார்.

மேலும் சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் இவர்களது மருமகன் ஆதவ் அர்ஜுனா த.வெ.க. சார்பில் போட்டியிட்டார். அவர் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட கார்த்திக் மோகனை 17,302 ஓட்டு வித்தியாசத்தில் வீழ்த்தினார். ஒரே குடும்பத்தில் தாய், மகன் மற்றும் மருமகன் தேர்தலில் வெற்றி வாகை சூடியது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.