;
Athirady Tamil News

கியூபாவின் ராணுவ குழுமம் மீது பொருளாதார தடை விதித்த அமெரிக்கா

0

ஹவானா,

கியூபாவின் பொருளாதாரத்தில் 40 சதவீதத்தைக் கட்டுப்படுத்தும் ‘கேசா’ என்ற ராணுவத் தொழில் குழுமம் மீது அமெரிக்கா புதிய பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. இந்த குழுமம் கியூபா ராணுவத்தால் நடத்தப்படுவதால், அதன் மூலம் கிடைக்கும் வருமானம் பொதுமக்களுக்குச் செல்லாமல் ஆளும் வர்க்கத்திற்கே செல்வதாக அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மார்கோ ரூபியோ குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த தடையால், கியூபாவுடன் 32 ஆண்டுகளாக வர்த்தக உறவில் இருந்த கனடாவின் ‘ஷெரிட்’ நிறுவனம் தனது முதலீடுகளைத் திரும்பப் பெறுவதாக அதிரடியாக அறிவித்துள்ளது. ஏற்கனவே எரிபொருள் பற்றாக்குறை மற்றும் மின்தடையால் தத்தளிக்கும் கியூபாவுக்கு, இந்த தடை மேலும் பேரிடியாக அமைந்துள்ளது.

இந்த தடையின் மூலம் கியூபாவுடன் வர்த்தகம் செய்யும் பிற நாட்டு நிறுவனங்களின் சொத்துகளையும் முடக்க அமெரிக்காவுக்கு அதிகாரம் கிடைத்துள்ளது. இதனால் வெளிநாட்டு நிறுவனங்கள் கியூபாவை விட்டு வெளியேறத் தொடங்கியுள்ளன. இது கியூபா மக்களைப் பழிவாங்கும் நடவடிக்கை என அந்நாட்டு அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.