ஸ்வீடனில் இருந்து ரஷ்யாவிற்கு சட்டவிரோத தொழில்நுட்ப கடத்தல்: இருவர் அதிரடி கைது
சட்டவிரோதமாக ரஷ்யாவிற்கு தொழில்நுட்ப கடத்தல் செய்த இருவர் ஸ்வீடனில் கைது செய்யப்பட்டுள்ளது.
ரஷ்யாவிற்கு தொழில்நுட்ப கடத்தல்
ரஷ்யாவிற்கு சட்டவிரோதமான முறையில் பொறியியல் தொழில்நுட்ப உபகரணங்களை கடத்திய இரண்டு பேரை ஸ்வீடன் பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர்.
ரஷ்யாவிற்கு எதிராக ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார தடை அமுலில் உள்ள நிலையில் இந்த கடத்தல் முயற்சி நடந்து இருப்பதாக ஸ்வீடன் நாட்டு அதிகாரிகள் திங்கட்கிழமை தகவல் தெரிவித்துள்ளனர்.
ஸ்வீடன் நாட்டின் தெற்கு மற்றும் மேற்கு பகுதி மற்றும் ஸ்டாக்ஹோம் பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின் போது இந்த கைது நடவடிக்கையானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் ஸ்வீடன் நாட்டை சேர்ந்தவர் என்றும், மற்றொருவர் துருக்கி நாட்டை சேர்ந்தவர் என்றும் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட இருவரும் கடந்த வெள்ளிக்கிழமை ஸ்டாக்ஹோம் நீதிமன்றத்தினால் முறைப்படி காவலில் எடுக்கப்பட்டுள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில், ரஷ்யாவிற்கு சட்டவிரோதமாக இரட்டை பயன்பாடு தொழில்நுட்பம்(Double use Technology) கடத்தப்பட்டு இருப்பதாக அறியப்படுகிறது.