;
Athirady Tamil News

கடந்த மே 3ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வு ரத்து

0

நாடு முழுவதும் மே 3ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் நீட் வினாத்தாள் முன்கூட்டியே கசிந்ததாக புகார்கள் எழுந்த நிலையில் விசாரணை நடத்தப்பட்டது.

இதில் முறைகேடு நடந்தது உறுதி செய்யப்பட்டு இந்த விவகாரம் தொடர்பாக 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் வினாத்தாள் கசிவு உறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, மே 3ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்த தேசிய தேர்வு முகமை பரிந்துரை செய்துள்ளது. அதனை மத்திய அரசும் ஏற்றுக்கொண்டுள்ளது.

மறுதேர்வு எப்போது நடைபெறும் என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.