;
Athirady Tamil News

கன மழையிலும் குளவிகொட்டுக்கு இலக்காகிய ஐந்து பெண் தொழிலாளர்கள்

0

பொகவந்தலாவை கெர்க்கஸ்வோல்ட் மேல் பிரிவு தோட்டப் பகுதியில் தேயிலை கொழுந்து பறித்து கொண்டிருந்த ஐந்து பெண் தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி பொகவந்தலாவை பிரதேச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நேற்று (14) இடம் பெற்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தேயிலை மலையில் குறித்த தோட்ட தொழிலாளர்கள் தேயிலை கொழுந்து பறித்து கொண்டிருந்த போது தேயிலை மரத்தின் அடியில் இருந்த குளவி கூடு கலைந்தமையினாலேயே இந்த விபரீத சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காயமடைந்த தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

காயங்களுக்கு உள்ளான தொழிலாளர்கள் மருத்துவமனையில் சிச்சை பெற்று வருவதுடன் அவர்கள் அச்சமடைய தேவையில்லை எனவும் மருத்துவமனையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.