;
Athirady Tamil News

ஹோர்முஸ் நீரிணைக்கு சுங்கக் கட்டணம் விதிக்கக் கூடாது! – டிரம்ப் உடனான சந்திப்பில் சீன அதிபர் கறார்!

0

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அரசு முறைப் பயணமாக சீனா நாட்டுக்குச் சென்றுள்ள நிலையில் ஹோர்முஸ் நீரிணை விவகாரம் குறித்து அந்நாட்டு அதிபர் ஷி ஜின்பிங்குடன் உரையாடியுள்ளார்.

இந்தச் சந்திப்பில், உலக எரிபொருள் விநியோகத்தை சீராக்க ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறக்கப்பட வேண்டுமென இருநாட்டு அதிபர்களும் முன்மொழிந்ததாக, அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, ஈரான் மற்றும் அமெரிக்கா இடையில் போர் தொடங்கியது முதல் முடக்கப்பட்டுள்ள ஹோர்முஸ் நீரிணை வழியாக கப்பல்கள் செல்ல சுங்கக் கட்டணம் விதிக்கக் கூடாது எனக் கூறி சீன அதிபர் ஜின்பிங் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இத்துடன், வியாழக்கிழமை (மே 14) காலை நடைபெற்ற அதிபர் டிரம்ப் உடனான சந்திப்பில், வளைகுடா நாடுகளைத் தவிர்த்து அமெரிக்காவிடம் சீனா கச்சா எண்ணெய் வாங்குவது குறித்த ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது.

மேலும், அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக விற்கப்படும் ஃபெண்டானில் உள்ளிட்ட போதைப் பொருள்களின் கடத்தலைத் தடுப்பது குறித்தும், அமெரிக்காவிடம் இருந்து வேளாண் பொருள்களை சீனா இறக்குமதி செய்வது குறித்தும் இருதரப்பினரும் விவாதங்கள் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.