;
Athirady Tamil News

கிழக்கு மாகாண போர்வீரர் விழா அனுஷ்டிப்பு

0

கிழக்கு மாகாண போர்வீரர் விழா அம்பாறை கொண்டுவட்டுவான் இராணுவப் போர்ப் பயிற்சி கூடத்தில் அமைந்துள்ள போர்வீரர்கள் நினைவிடத்தில் வியாழக்கிழமை(14) கொண்டாடப்பட்டது.

கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் லால் ரத்னசிறி தலைமையில் இவ்விழா நடைபெற்றது.

பொது வரவேற்பு விழாவைத் தொடர்ந்து கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் லால் ரத்னசிறியினால் தேசியக் கொடி ஏற்றப்பட்டது.

பின்னர், ஆளுநர் போர்வீரர்கள் நினைவிடத்தில் மலர்வளையங்கள் வைத்து அஞ்சலி செலுத்தினார். இதனைத் தொடர்ந்து பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ, பாராளுமன்ற உறுப்பினர்கள் மஞ்சுல ரத்நாயக்க, பிரியந்த விஜேரத்ன, அம்பாறை அரசாங்க முகவர் அனுபம மங்கள விக்ரமாராச்சி, கிழக்கு கட்டளை மேஜர் ஜெனரல் ஜே.எஸ்.பி.டபிள்யூ. பல்லேகும்புர, 24-வது டிவிஷன் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் திலுப பண்டார, இலங்கை கடற்படையின் கிழக்கு கட்டளை தளபதி பி.கே. வர்ணகுலசூரிய, கிழக்குப் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜெயசுந்தர, இலங்கை விமானப்படையின் உஹான முகாமின் கட்டளை அதிகாரி குரூப் கேப்டன் பி.எஸ். அலெக்சாண்டர் மற்றும் அம்பாறை சிவில் பாதுகாப்புப் படையின் கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கர்னல் கபில தர்மதாச ஆகியோர் போர் வீரர்கள் நினைவிடத்தில் மலர்வளையங்கள் வைத்து போர் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

அதனைத் தொடர்ந்து, போரில் உயிர்நீத்த போர் வீரர்களின் பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளின் நினைவாக போர் வீரர்கள் நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்தியது மிகவும் நெகிழ்ச்சியான தருணமாக அமைந்தது.

இந்நிகழ்வில், 241வது படைப்பிரிவின் தளபதி பிரிகேடியர் ஆர்.எஸ்.சி. திசநாயக்க, பிரிகேடியர் ஏ.கே.சி.எஸ். டி சில்வா, அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்ல, அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராய்ச்சி , அம்பாறை மாவட்ட உதவி உள்ளூராட்சி ஆணையாளர் ஐ.எஸ்.ஏ.கமல் நெத்மினி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

   

You might also like

Leave A Reply

Your email address will not be published.