;
Athirady Tamil News

பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கையை குறைத்த ஆளுநர்

0

சென்னை: தமிழக ஆளுநர் அர்லேகருக்கு வழங்கப்பட்டு வந்த காவல்துறை பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கை 4 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

உலகளாவிய போர் பதற்றம் சூழல்கள் காரணமாக, நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் பயன்பாட்டை குறைக்க வேண்டும் என்பன போன்ற சிக்கன நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டுமென், பிரதமர் நரேந்திர மோடி கடந்த மே 10ம் தேதி மக்களிடம் வலியுறுத்தினார்.

இதையடுத்து, பிரதமர் மோடி உட்பட முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பு வாகனங்கள் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டன. அந்த வரிசையில், தமிழக ஆளுநர் அர்லேகருக்கு வழங்கப்பட்டு வந்த காவல்துறை பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கை 4 ஆக குறைக்கப் பட்டுள்ளது.

இது குறித்து, ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அலுவல் ரீதியாகவும், அரசு மற்றும் தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்க செல்லும் பயணங்களின் போதும் 10 காவல் துறை பாதுகாப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன.

தற்போது, பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு விடுத்துள்ள 7 வேண்டுகோள்களில் ஒன்றான ‘பெட்ரோல் டீசல் பயன்பாட்டை குறைத்து பொது போக்குவரத்தை உபயோகிக்க வேண்டும்’ என்பதை கருத்தில் கொண்டு, ஆளுநரின் அறிவுறுத்தலின் படி, அவருக்கு தரப்பட்டு வந்த காவல்துறை பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கை 4 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக் கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.