;
Athirady Tamil News

பாழடைந்த மடப்பள்ளி ஒன்றிலிருந்து மீட்கப்பட்ட சடலம்

0

காலி கொஸ்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மகா இந்துருவ பகுதியில் உள்ள இடிந்து விழுந்த பாழடைந்த மடப்பள்ளி ஒன்றிலிருந்து அடையாளம் தெரியாத நபரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கொஸ்கொட மஹா இந்துருவ பகுதியில் நேற்று (16) சனிக்கிழமை பிற்பகல் உள்ள இடிந்து வீழ்ந்த நிலையில் காணப்படும் கட்டடம் ஒன்றினுள் சடலமொன்று காணப்படுவதாக கொஸ்கொடை பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலுக்கமைய பொலிஸார் விசாரணைகள் முன்னெடுத்திருந்தனர்.

உயிரிழந்தவர் தொடர்பான விபரங்கள் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதுடன், அவரது அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

சடலம் மீதான நீதிவான் விசாரணை மற்றும் பிரேத பரிசோதனைகளுக்காக சடலம் பலபிட்டிய ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் கொஸ்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.