;
Athirady Tamil News

ஆமைக்கறி விவகாரம் ; அர்ச்சுனாவை கடுமையாக விமர்சித்த சீமான்

0

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தை முன்னிட்டு இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்ட கருத்துகள் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

கூட்டத்தில் உரையாற்றிய சீமான், நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனாவை கடுமையாக விமர்சித்து பேசினார். அப்போது, “தமிழீழம் எங்கு இருக்கிறது என்பது கூட தெரியாது.

தெற்கு, வடக்கு எது என்பதையும் அறியாதவர், நான் ஆமைக்கறி சாப்பிட்டேனா இல்லையா என்பதையே பிரச்சினையாக மாற்றியுள்ளார்” எனக் குறிப்பிட்டார்.

இந்த விவகாரம் அண்மையில் அர்ச்சுனா இந்திய ஊடகங்களுக்கு வழங்கிய கருத்துகளைத் தொடர்ந்து உருவாகியுள்ளது.

இந்திய ஊடக சந்திப்பில், 40 முதல் 50 கிலோ வரை ஆமை வத்தல் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது. அப்படியானால் ஆயிரக்கணக்கான ஆமைகள் பிடிக்கப்பட்டிருக்க வேண்டும்.

விடுதலைப் போராட்டத்தை விடுத்து போராளிகள் சீமானுக்காக ஆமைகளை பிடிக்க தான் சென்றிருக்க வேண்டும் என அர்ச்சுனா விமர்சித்துள்ளார்.

இந்தக் கருத்துகளுக்குப் பதிலளிக்கும் வகையிலேயே, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கூட்டத்தில் சீமான் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.