;
Athirady Tamil News

கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் ; 24 மணித்தியாலங்களுக்கு எச்சரிக்கை!

0

நாட்டைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளில் அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு பலத்த காற்றும் கொந்தளிப்பான கடல் நிலையும் காணப்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

இன்று (19) பிற்பகல் 2.00 மணிக்கு இந்த எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடல் பகுதிகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.

இதேவேளை ஏனைய கடல் பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளையில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாட்டைச் சூழவுள்ள கடல் பகுதிகளில் காற்று தென்மேற்கு திசையிலிருந்து மணிக்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.