;
Athirady Tamil News

AI தொழில்நுட்பம் ; Meta நிறுவனத்தில் 8,000 ஊழியர்கள் பணிநீக்கம்

0

சுமார் 8,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாக Meta நிறுவனம் அறிவித்துள்ளது. Meta நிறுவன பணிநீக்க நடவடிக்கை, நிறுவனத்தின் மொத்த ஊழியர்களில் சுமார் 10 சதவீதத்தினரை பாதிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

AI தொழில்நுட்ப முதலீடுகளை அதிகரிக்கும் நோக்கிலும், நிறுவனத்தின் செயல்திறனை மேம்படுத்தும் முயற்சிகளின் அடிப்படையிலும் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்கள் பலவும் அண்மைக்காலமாக AI துறையில் அதிக முதலீடுகளை மேற்கொண்டு வருவதுடன், அதனுடன் தொடர்புடைய மறுசீரமைப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.