;
Athirady Tamil News

பற்களை இயற்கையாகவே மீண்டும் முளைக்கச் செய்யும் மருந்து – ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள் தொடக்கம்

0

டோக்கியோ,

“பல் மருத்துவ உலகில் மாபெரும் புரட்சி!”: விழுந்த பற்களை மீண்டும் இயற்கையாக முளைக்க வைக்கும் ‘TRG-035’ மருந்து- ஜப்பானில் மனிதர்களுக்கான மருத்துவப் பரிசோதனை அதிரடித் துவக்கம்!

பற்கள் விழுந்த இடத்தில் செயற்கை பற்கள் மற்றும் இம்ப்ளான்ட் (Implants) சிகிச்சைகளுக்கு மாற்றாக, பற்களை இயற்கையாகவே மீண்டும் முளைக்கச் செய்யும் ‘TRG-035’ என்ற புதிய மருந்தின் உலகின் முதலாவது மனித மருத்துவப் பரிசோதனையை ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளனர்.

கியோட்டோ பல்கலைக்கழக மருத்துவமனையில் துவங்கியுள்ள இந்த தீவிரப் பரிசோதனை வெற்றிகரமாக முடிகின்ற பட்சத்தில், வரும் 2030 ஆம் ஆண்டிற்குள் இந்த மருந்து உலக சந்தைக்கு விற்பனைக்கு வரும் எனப் பல் மருத்துவ நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.