;
Athirady Tamil News

10 வயது சிறுமி கொலை வழக்கில் புதிய திருப்பம் ; தாயின் பரபரப்பு குற்றச்சாட்டு

0

கோவை (Coimbatore) மாவட்டத்தின் சூளூர் பகுதியில் 10 வயது சிறுமி கடத்தப்பட்டு பாலியல் அத்துமீறலுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காணாமல் போன சிறுமி பின்னர் குளம் ஒன்றில் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், சிறுமியின் பக்கத்து வீட்டில் வசித்து வந்த இருவரே இந்தக் கொடூரச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, சிறுமியின் தாய் வெளியிட்டுள்ள கருத்துகள் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், பிரேத பரிசோதனைக்குப் பிறகு மகளின் உடலை தன்னிடம் காண்பிக்கவில்லை என்றும், தனக்குத் தெரியாமல் சிறுமியின் தந்தை உடலை பெற்றுச் சென்று சொந்த ஊரான Salem மாவட்டத்தில் தகனம் செய்துவிட்டதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார். “நான் செல்வதற்குள் உடலை எரியூட்டி விட்டனர்.

எங்களுக்கு நீதி வேண்டும்” என அவர் கண்ணீருடன் தெரிவித்துள்ளார். மேலும், மகளின் உடலை பெற்றுக்கொள்வதற்காக மருத்துவமனையில் தாம் எந்தவித கையெழுத்தும் இடவில்லை என்றும் சிறுமியின் தாய் கூறியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் தமிழக காவல்துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.