மட்டக்களப்பில் விபத்து : ஐவர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி
மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதான வீதி வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தில் முன்பாக தனியர் பேருந்தும் சிறிய ரக லொறி ஒன்றும் இன்று செவ்வாய்க்கிழமை (26) காலை 10.30 மணியளவில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் பேருந்து நடத்துனர் உட்பட 5 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
நேருக்கு நேர் மோதி விபத்து
ஆரையம்பதியில் இருந்து கதுருவெல பிரதேசத்துக்கு பிரயாணித்த தனியார் பேருந்தும் வாழைச்சேனை பகுதியில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பிஸ்கட்கள் ஏற்றிச் சென்ற லொறியும் சித்தாண்டி வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்துக்கு முன்னால் உள்ள பிரதான வீதி பாதசாரிகள் வீதியை கடக்கும் வெள்ளை கோட்டு பகுதியில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சந்திவெளி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.