மே மாதம் 31ஆம் திகதி விசேட விடுமுறை!
2026ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் உற்சவத்தை முன்னிட்டு, மே மாதம் 31ஆம் திகதியை அரசாங்க விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தி பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
முன்னதாக மே மாதம் 2ஆம் திகதி வழங்கப்படவிருந்த விடுமுறையைத் திருத்தம் செய்து இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.