;
Athirady Tamil News

பெண்கள் சந்தை மற்றும் உணவகங்கள் திடீர் பரிசோதனை.

0

அம்பாறை மாவட்டம்  சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பெண்கள் சந்தை மற்றும் உணவகங்கள்  பரிசோதனைக்குட்படுத்தப்பட்டன.

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி  வைத்தியர் ஜே.மதனின்  தலைமையில் இன்று பரிசோதனை செய்யப்பட்டன.

கிடைக்கப்பெற்ற  முறைப்பாடு தொடர்பாக இத் திடீர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதுடன் இந்த பரிசோதனையின் போது பெண்கள் சந்தையில் எந்த ஒரு குறைபாடு இல்லை என கண்டறியப்பட்டுள்ளது.

பொதுமக்களின் சுகாதாரத்தை பாதுகாக்கும் வகையில் வியாபாரிகளுக்கு தேவையான அறிவுறுத்தல்கள் மற்றும் விழிப்புணர்வும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில்   பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் நுளம்பு கட்டுப்பாட்டு உதவியாளர்கள் கலந்துகொண்டு செயற்பாடுகளை  முன்னெடுத்தனர்.

இத்தகைய நடவடிக்கைகள் பொதுமக்களின் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி  வைத்தியர் ஜே.மதன் குறிப்பிட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.