;
Athirady Tamil News

பிரித்தானியாவில் வரலாறு காணாத வெப்பம்: நீரில் மூழ்கி பலியானோர் எண்ணிக்கை 11 ஆக அதிகரிப்பு

0

பிரித்தானியாவில் வரலாறு காணாத வகையில் வீசி வரும் வெப்ப அலை காரணமாக நீர் நிலைகள் சென்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.

பிரித்தானியாவில் நிலவி வரும் கடும் வெப்ப அலைகளுக்கு மத்தியில் பொதுமக்கள் வெப்பத்தில் இருந்து தப்பிப்பதற்காக நீர்நிலைகளுக்கு படையெடுத்து வருகின்றனர்.

அவ்வாறு இந்த ஆண்டு நீர்நிலைகளுக்கு குளிக்கச் சென்று நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை பிரித்தானியாவில் 11 ஆக அதிகரித்து இருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உறுதி செய்யப்பட்ட 2 இறப்புகள்
வியாழக்கிழமை மட்டும் நீரில் மூழ்கி 2 பேர் உயிரிழந்து இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தேம்ஸ் காவல்துறையினர் தெரிவித்த தகவலில், டானிங்டன் பிரிட்ஜ் அருகே தேம்ஸ் ஆற்றில் குளிக்க சென்ற 14 வாது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் ஸ்வான்ஸ்கோம்(Swanscombe) கென்ட்(Kent) பகுதியில் உள்ள குளத்தில் குளிக்க சென்று மற்றொரு பதின்ம வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் நீர்நிலைகளில் குளிக்க சென்று நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது கவலையை அதிகரிக்க செய்துள்ளது.

செவ்வாய்க்கிழமை ரிப்ஸ்டர்(Ribchester) பகுதியில் ஓடும் ரிபிள்(Ribble) ஆற்றில் நீந்துவதற்காக சென்ற ஜூனியர் ஸ்லேட்டர்(Junior Slater) என்ற 12 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.