;
Athirady Tamil News

யாழில். தரமற்ற உப்பு விற்பனை முகாமையாளர்களுக்கு ஒன்றரை மாத சிறை

0
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் தரமற்ற உப்பினை விற்பனை செய்தமை உள்ளிட்ட குற்றங்களுக்காக பல்பொருள் அங்காடி மற்றும் உப்பு உற்பத்தி நிறுவன முகாமையாளர் ஆகியோருக்கு ஒன்றரை வருட சிறைத்தண்டனை விதித்துள்ள நீதிமன்று , 18 ஆயிரம் ரூபா தண்டமும் விதித்துள்ளது.
கோப்பாய் பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் பொது சுகாதார பரிசோதகர் மேற்கொண்ட திடீர் பரிசோதனை நடவடிக்கையின் போது. தரமற்ற உப்பு விற்பனைக்கு வைத்திருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.
அதனை கைப்பற்றிய சுகாதார பரிசோதகர், நீதிமன்ற அனுமதியுடன் உப்பின் மாதிரியை கடந்த பெப்ரவரி மாதம் 18ஆம் திகதி அரச இராசயன பகுப்பாய்வுக்கு அனுப்பி அறிக்கை கோரி இருந்தார்.
உப்பு தரமற்றது என அறிக்கை கிடைக்கப்பெற்றதை அடுத்து , பல்பொருள் அங்காடி முகாமையாளர் மற்றும் உப்பு உற்பத்தி நிலைய முகாமையாளர் ஆகியோருக்கு எதிராக தனித்தனியாக மூன்று குற்றச்சாட்டுக்களின் கீழ் பொது சுகாதர பரிசோதகர் யாழ்ப்பாண மேலதிக நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கு விசாரணை நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது இருவரும் தம் மீதான குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொண்டனர்
அதனை அடுத்து ஒவ்வொரு குற்றத்திற்கு 6 ஆயிரம் ரூபாய் வீதம் மூன்று குற்றச்சாட்டுக்கு 18 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்த நீதிமன்று , ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கு 06 மாத கால சிறைத்தண்டனை விதித்ததன் அடிப்படையில் ஒன்றரை வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. மூன்று குற்றங்களுக்கான சிறை தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க மன்று கட்டளையிட்டது.
அதேவேளை குறித்த நிறுவனத்தால் மற்றைய அங்காடிகளுக்கும் வழங்கப்பட்ட உப்புக்களை அனைத்தையும் மீள பெற நடவடிக்கை எடுக்குமாறும் மன்று கட்டளையிட்டுள்ளது.
You might also like

Leave A Reply

Your email address will not be published.