;
Athirady Tamil News

லொறியுடன் சொகுசு பேருந்து மோதியதில் பலர் காயம்!

0

தம்புள்ளை – குருணாகல் பிரதான வீதியின் கலேவெல, கநாதன பகுதியில் இன்று (03) பிற்பகல் 2.20 மணியளவில் இடம்பெற்ற பயங்கர வீதி விபத்தில், சொகுசுப் பஸ்ஸில் பயணித்த பலர் காயமடைந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முன்னால் சென்ற மற்றொரு வாகனத்தை முந்திச் செல்வதற்காக எதிரே வந்த பாரவூர்தி ஒன்றுடன் மோதுவதைத் தவிர்ப்பதற்காகப் பஸ் சாரதி பஸ்ஸை இடதுபுறமாகத் திருப்பியுள்ளார்.

இதன்போது, வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த லொறியுடன் பஸ் பலமாக மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

விபத்தில் பஸ்ஸின் முன்பகுதி பலத்த சேதமடைந்துள்ளதுடன், காயமடைந்தவர்கள் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், விபத்து குறித்து கலேவெல பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.