;
Athirady Tamil News

சீன அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டில் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும்  உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு

0

சீன அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டில் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் பெற்றோர்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு கல்முனை அல்-அஸ்ஹர் வித்தியலயத்தில் பாடசாலை அதிபர் எஸ்.எம்.எஸ்.ரிசானா தலைமையில் இன்று (04)இடம்பெற்றது.

கல்முனை  மாநகரசபை முன்னாள் பிரதி முதல்வரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொருளாளரும்,கல்முனை ரஹ்மத் பவுண்டேசனின் ஸ்தாபக தலைவருமான ரஹ்மத் மன்சூரின் அழைப்பின் பேரில் இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் (Qi Zhenhong) பிரதம அதிதியாக கலந்து கொண்டு கற்றல் உபகரணங்கள் மற்றும் உலர் உணவுப் பொருட்களை வழங்கி வைத்தார்.

இந் நிகழ்வு சீன இலங்கை சகோதர பாசம் எனும் திட்டத்தின்கீழ்  இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதன் போது கெளரவ அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ்,கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹ்துல் நஜீம் ,அம்பாறை மாவட்ட பிரதிப்பொலிஸ் மாஅதிபர் சுஜித் வெதமுல்ல ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் இந்த நிகழ்வில் அரசியல் பிரமுகர்கள்  ஆசியரியர்கள் மாணவர்கள்,பெற்றோர்கள் நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.