;
Athirady Tamil News

இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்திய வங்கிக் கொள்ளை – பின்னணியிலுள்ள மர்ம நபர்

0

ஹொரணையின் அரச வங்கி ஒன்றின் ஏடிஎம் இயந்திரங்களில் வைப்பதற்காக எடுத்துச் சென்ற சுமார் 3.5 கோடி ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இந்த கொள்ளையின் பின்னணியில் குறித்த வங்கியில் பணியாற்றும் ஒரு ஊழியரே இருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொள்ளை சம்பவம் நடப்பதற்கு சில மணித்தியாலங்களுக்கு முன்னர், வங்கியின் ஊழியர்களுக்கு வந்த தொலைபேசி அழைப்புகள் குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பொலிஸார் விசாரணை
பணக்கொள்ளையின் பின்னரும், அன்றைய தினம் வங்கியின் சில ஊழியர்களுக்கு கிடைத்த தொலைபேசி அழைப்புகள் மற்றும் அவர்கள் தொடர்பு கொண்ட தொலைபேசி இலக்கங்களும் விசாரணைகளுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளன.

வங்கியிலிருந்து வீதியிலுள்ள கட்டடங்களில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமரா அமைப்புகளும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த பணத்தை ஏடிஎம் இயந்திரங்களில் வைப்பதற்காக எடுத்துச் சென்ற வங்கி அதிகாரியிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக ஹொரணை பொலிஸ் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த பணக்கொள்ளை நடந்த முன்தினம் விடுமுறை பெற்றிருந்த வங்கி அதிகாரிகள் குறித்தும் பொலிஸார் அவதானம் செலுத்தியுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.