F18 வயது பெண்கள் அணிகளுக்கிடையில் தேசிய மட்ட உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் மகாஜன சாம்பியன்
;
போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல்கள் எவையும் போடவில்லை இரண்டாம் பாதியில் மகாஜனா கல்லூரி பெண்கள் அணி இரண்டு கோல்களை போட்டு இந்த தொடரின் சம்பியன் ஆகியது
இப்போட்டியில் இரண்டாம் பாதியில் மகாஜனா கல்லூரி வீராங்கனை J.கல்கிசா முதல் கோலையும், அடுத்த கோலை ஆன்ரிவிஸ்சனா போட்டார்
ஏற்கனவே நடைபெற்ற இந்த போட்டியில் பொலநறுவை றோயல் கல்லூரிக்கு எதிரான போட்டியில் J. கல்கிசா மூன்று கோல்களை தொடர்ந்து போட்டு , ஹெட்ரிக் கோல்களை போட்டு அணியை இறுதிப் போட்டிக்கு முன்னேறச் செய்தமையும் குறிப்பிடத்தக்கது
இத்தொடரின் சிறந்த வீராங்கனையாக மகாஜன கல்லூரியை சேர்ந்த ஆன்ரிவிஸ்சனாவும் சிறந்த கோல்காப்பாளராக மகாஜனாகல்லூரியை சேர்ந்த சாளினியும் தெரிவுசெய்யப்பட்டனர்.