நல்லூர் வேல்பெருமானுக்கு 1008 சங்குகளால் ஆனந்த அபிஷேகம்: திரண்ட பக்தர்கள்!
வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவில் கும்பாபிஷேக தினமான இன்று(10) காலை ஆலயத்தில் சகஸ்ரசங்காபிஷேகம் நடைபெற்றது.
இன்றைய தினம் ஆலயத்தில் விசேட அபிஷேக பூசைகள் நடத்தப்பட்டு, மூலஸ்தானத்தில் வீற்றுள்ள வேல்பெருமானுக்கு அந்தண சிவாச்சாரியார்களால் 1008 சங்குகளால் ஆனந்த அபிஷேகம் இடம்பெற்றது. .
