இலங்கை மத்திய வங்கியின் அதிரடி அறிவிப்பு ; கட்டாயமாக்கபடும் நடைமுறை
ஒவ்வொரு நாட்காட்டி மாதத்திலும் இலங்கைக்கு கிடைக்கும் ஏற்றுமதி வருமானத்தில் பயன்படுத்தப்படாமல் எஞ்சியிருக்கும் தொகையை, அடுத்த மாதத்தின் 10 ஆம் திகதிக்குள் அல்லது அதற்கு முன்னர் கட்டாயமாக இலங்கை ரூபாவாக மாற்ற வேண்டும் என்று இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
மத்திய வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட குறிப்பிட்ட செலவுகள் மற்றும் கொடுப்பனவுகளுக்காக ஏற்றுமதி வருமானத்தை பயன்படுத்திய பின்னர், மீதமுள்ள தொகையே இவ்வாறு உள்நாட்டு நாணயமாக மாற்றப்பட வேண்டும் என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏற்றுமதி வருமான முகாமைத்துவம் மற்றும் அந்நியச் செலாவணி ஒழுங்குமுறைகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.