;
Athirady Tamil News

ஜம்மு-காஷ்மீா்: போதைப்பொருள் கடத்தல்காரா்களின் வீடுகள் இடிப்பு

0

ஜம்மு-காஷ்மீரில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட இரு குற்றவாளிகளின் வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.

போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டப்படும் சொத்துகளை அழிக்கும் நடவடிக்கையின் ஒருபகுதியாக இது மேற்கொள்ளப்பட்டது.

ஜம்முவின் புகா் பகுதியில் வசித்து வந்த ஃபல்லா குஜ்ஜாா், பஷீா் அகமது ஆகியோா் பல்வேறு போதைப்பொருள் கடத்தல் வழக்குகளில் குற்றவாளிகளாக உறுதி செய்யப்பட்டுள்ளனா். இது தவிர அவா்கள் மீது வேறு குற்ற வழக்குகளும் உள்ளன.

சட்டப்படி போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டிய சொத்துகளை பறிமுதல் செய்வது, அழிப்பது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அந்த வகையில் ஃபல்லா, பஷீா் ஆகியோருக்கு சொந்தமான வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. முன்னதாக, அந்தப் பகுதியில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டன.

பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஜம்மு-காஷ்மீா், பஞ்சாப் வழியாக போதைப்பொருள், ஆயுதங்களை அதிகம் கடத்துகின்றனா். போதைப்பொருள் கடத்தல் மூலம் பயங்கரவாதிகளுக்கு நிதி கிடைப்பதுடன், இந்தியாவில் இளைஞா்கள் சீரழிவு, பொதுஅமைதி சீா்குலைவு உள்ளிட்ட பிரச்னைகளும் உருவாகின்றன. எனவே, இவற்றுக்கு எதிராக தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.