;
Athirady Tamil News

அமெரிக்காவின் தாக்குதலுக்கு நேரடியாக உதவியது இவர்கள் தான் ; ஈரான் பகிரங்க குற்றச்சாட்டு

0

மத்திய கிழக்குப் போரில் தங்களுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளில் அமெரிக்காவிற்கு ஐக்கிய அரபு அமீரகம் உதவியதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.

டெல்லியில் இன்று இரண்டாவது நாளாக நடைபெற்ற பிரிக்ஸ் பாதுகாவலர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய ஈரான் தேசிய பாதுகாப்பு மன்றத்தின் துணைச் செயலாளர் கதிர் நெசாமிபூர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

பிரிக்ஸ் நாடுகளின் பாதுகாப்பு முகமைகளின் தலைவர்கள் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களின் 16வது கூட்டத்தின் போது பேசிய நெசாமிபூர்., “ஹார்மூஸ் நீரிணை தொடர்பான சிக்கல்களுக்கும், அதன் ஆக்கிரமிப்புக்கும் அமெரிக்காவும், சியோனிச ஆட்சியும்தான் காரணம் என்பதை உலகம் அறியும்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்தும் அமெரிக்கப் படைகள் தாக்கின. ஆனால் அத்தகைய விரோதச் செயலை கண்டிப்பதற்கு பதிலாக, ஈரானின் பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்த அமெரிக்காவிற்கு தனது தளங்களைப் பயன்படுத்த அனுமதி வழங்கியது ஐக்கிய அரபு அமீரகம்.

ஐக்கிய அரபு அமீரகம் இத்தகைய நடவடிக்கைகளை ஆதரிப்பது மற்றும் சாகச நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்குப் பதிலாக, அண்டை நாடுகளுடனான நல்லிணக்கக் கொள்கைகளை மதித்து, அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் பிராந்திய ஒத்துழைப்புக்கான பாதையைத் தேர்ந்தெடுக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.” என தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.