;
Athirady Tamil News

சிறுவயதில் இறந்தவர்களுக்கு 25 ஆண்டுகளுக்கு பிறகு திருமணம்

0

மங்களூரு,

தட்சிண கன்னடா மாவட்டம் புத்தூர் அருகே உள்ள முண்டூரில், 25 ஆண்டுகளுக்கு முன்பு ஆனந்த், சரோஜா ஆகியோர் சிறுவயதிலேயே உயிரிழந்தனர், அவர்களின் ஆத்மாக்கள் சாந்தியடையவும்.

பேய் திருமணம்
குடும்பத்தினர் சந்தித்து வந்த தடைகள் நீங்கவும் துளுநாட்டின் பாரம்பரிய சடங்கான ‘பேய்த் திருமணம்’ விமரிசையாக நடைபெற்றது. சிறுவயதில் தங்களது ஆசைகள், கனவுகளை இழந்து உயிரிழந்தவர்களுக்கு, தற்போது உயிருடன் இருப்பவர்களின் திருமணத்தை போலவே வெகுவிமரிசையாக நடத்தப்பட்டது. களிமண் மற்றும் வாழைப்பழங்களை கொண்டு மணமக்கள் உருவங்கள் வடிவமைக்கப்பட்டன.

திருமண விருந்து
பின்னர் அந்த களிமண் சிலைகளுக்கு புத்தாடை, நகைகள் அணிவித்து, மாலை மாற்றப்பட்டு, மாங்கல்யம் சூட்டுதல் உள்ளிட்ட அனைத்து சடங்குகளும் முறைப்படி அரங்கேறின. இதன்பின், உறவினர்களுக்கு திருமண விருந்தும் அளிக்கப்பட்டது.

துளுநாட்டின் ஆன்மிக பாரம்பரியத்தையும், மூதாதையர் வழிபாட்டையும் பிரதிபலிக்கும் இந்த அரிதான பேய் திருமணம் உள்ளூர் மக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி அவர்களின் கவனத்தையும் ஈர்த்தது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.