;
Athirady Tamil News

இலங்கையில் அதிரடி தீர்ப்பு – பௌத்த பிக்கு உட்பட நான்கு பேருக்கு 101 ஆண்டுகள் சிறைத்தண்டனை

0

பதின்ம வயது சிறுவர்களை கடுமையான முறையில் தகாத முறைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டுகளுக்காக நால்வருக்கு, 101 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சிறுவர் குற்றங்களுக்கான அனுராதபுரம் சிறப்பு மேல் நீதிமன்றத்தினால் வெறும் 20 நாட்களில் நான்கு குற்றவாளிகளுக்கு 101 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மேல் நீதிமன்ற நீதிபதிகளான சந்துன் விதான மற்றும் ருவன் தம்மிக திஸாநாயக்க ஆகியோரால் இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.

தகாத நடவடிக்கை
சட்டமா அதிபர் சார்பில் அரச சிரேஷ்ட சட்டத்தரணி சமிக குருகே இந்த அனைத்து வழக்குகளையும் வழிநடத்தியிருந்தார்.

அதற்கமைய, துறவறத்திற்காக விகாரையில் ஒப்படைக்கப்பட்ட சிறுவனை, ஒப்படைக்கப்பட்ட முதல் நாள் முதல் கடுமையான தகாத நடவடிக்கைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் தம்புத்தேகம, ஹுரீகஸ்வெவ, தலாகொலவெவ ஸ்ரீ சம்புத்த வாலுகாராம விகாராதிபதிக்கு 30 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

கடூழியச் சிறைத்தண்டனை
10 வயதுடைய சிறுவன் ஒருவரை கடுமையான தகாத செயற்பாட்டுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கலென்பிந்துணுவௌ, சிவலாகுலம ஸ்ரீ சீவலி சைத்தியாராம விகாராதிபதிக்கு 24 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

உறவுமுறையில் தனது சகோதரியான 7 வயதுடைய சிறுமியை தவறான நடத்தைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கே.எஸ். சுமுது சம்பத் குமார என்பவருக்கு 15 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

தனது காதலியின் 15 வயதுடைய மகளைக் கொடூரமான முறையில் தகாத சீண்டலுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் குற்றவாளிக்கு 32 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.