;
Athirady Tamil News

சாவகச்சேரியில் நாளை கடையடைப்புக்கு அழைப்பு

0

சாவகச்சேரி நகர சபை உப தவிசாளரின் பதவி பறிக்கப்பட்டு , உறுப்பினர் பதவியும் வறிதாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து சாவகச்சேரி வர்த்தகர்கள் கடையடைப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர்.

உள்ளூராட்சி ஆணையாளரின் சுற்றறிக்கையை சபையில் விமர்சித்து , அதனை தூக்கி வீசிய குற்றத்தில் , நகர சபை உப தவிசாளர் ஞா. கிசோரை வடமாகாண ஆளுநர் , உப தவிசாளரின் பதவியை நீக்கியும் ,  நகர சபை உறுப்புரிமையை வறிதாக்கியும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிட்டுள்ளார்.
குறித்த சம்பவத்தை கண்டித்தும் நீதி கோரியும் , சாவகச்சேரி வர்த்தகர்கள் நாளைய தினம் வெள்ளிக்கிழமை முழு கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
எமது மண்ணின் நீதிக்காக இன, மத, மொழி பேதங்களைக் கடந்து, சாவகச்சேரி அனைத்து வர்த்தக பெருமக்களும் தங்களது கடைகளை முழுமையாக மூடியும் , பொதுமக்களும் இணைந்து  இந்த அறப்போராட்டத்திற்கு பேராதரவு தருமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம் என வர்த்தகர்கள் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்தி குறிப்பில் குறிப்பிட்டுள்ளனர்.
You might also like

Leave A Reply

Your email address will not be published.