;
Athirady Tamil News

புனே இளைஞர் கொலை சம்பவம்: சந்தேகம் வராமல் இருக்க இணைய இணைப்பை துண்டித்த காதலன்

0

புனே: புனே ரியல் எஸ்டேட் இயக்குநர் கொலை சம்பவத்தில் சந்தே கத்தை தவிர்ப்பதற்காக நிச்ச யிக்கப்பட்ட பெண்ணின் காதலன் தனது செல்போன் இணைய இணைப்பை 640 நிமிடங்கள் துண்டித்து வைத்திருந்ததை போலீஸார் கண்டுபிடித்து உள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலம் புனேவைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் இயக்குநர் கேத்தன் அகர்வாலுக்கு (25), சியா கோயல் (20) என்ற பெண்ணுடன் அவரது பெற்றோர் திருமண நிச்சயதார்த்தம் செய்தனர். இந்த திருமணத்தில் சியாவுக்கு விருப்பம் இல்லை. அவருக்கு சேத்தன் சவுத்திரி (22) என்ற காதலன் இருந்தார்.

வசதியான மாப்பிள்ளை வீட்டாரின் திருமண ஏற்பாடுகளை தடுக்க முடியாததால், கேத்தனை கொலை செய்ய சியா முடிவு செய்தார். அருகில் உள்ள லோனாவாலா மலைப் பகுதியில் லோகாகாட் கோட்டைக்கு மலையேற்றத்துக்கு அழைத்துச் சென்று மலை உச்சியில் இருந்து பள்ளத்தில் தள்ளி கொலை செய்ய திட்டமிட்டார். இதற்காக அங்கு கேத்தனை 3 முறை சியா அழைத்துச் சென்றார். 2-வது முறை பயணத்தில் பாம்பு வந்ததாக கூறி கேத்தனை தள்ளிவிட முயன்றபோது அவர் புதரை பிடித்து தப்பி விட்டார்.

3-வது முறை காதலன் சேத்தனுடன் சேர்ந்து கேத்தனை கொலை செய்ய முடிவு செய்யப்பட்டது. செல்போனை கொண்டு சென்றால் அதன் சிக்னல் மூலம் சிக்கி விடுவோம் என்பதை அறிந்த சேத்தன், செல்போன் இணைய இணைப்பை கடந்த 18ம் தேதி காலை 7 மணிக்கு துண்டித்து விட்டு, செல்போனை கடை ஊழியர்களிடம் கொடுத்து விட்டு, ஊழியர் ஒருவரின் செல்போனை வாங்கி கொண்டு லோகா காட் சென்றுள்ளார். சியாவும், சேத்தனும் சேர்ந்து, கேத்தனை கொன்றுவிட்டு திரும்பிய பின் அன்று மாலை 5.40 மணிக்குதான் தனது செல்போன் இணைய இணைப்பை ஆன் செய்துள்ளார். போலீஸாருக்கு சந்தேகம் வராமல் இருக்க, அவர் சுமார் 640 நிமிடங்கள் இணைய இணைப்பை துண்டித்து வைத்துள்ளார்.

ஆனால், அதுவே போலீ ஸாருக்கு சந்தேகத்தை எழுப்பி சேத்தனிடம் தீவிர விசாரணை நடத்த வழிவகுத்தது. சியா வும், சேத்தனும் கடந்த 6 மாதத்தில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 8 முதல் 10 முறை பேசியதையும் மொத்தம் 2004 அழைப்புகளில் 238 மணி நேரம் பேசியதையும் போலீஸார் இருவரின் செல்போன் எண் தரவுகளை ஆய்வு செய்து கண்டறிந்துள்ளனர். இவர்கள் சாட் செய்த தகவல்களையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.