;
Athirady Tamil News

இலகு தொடருந்து திட்டம் தொடர்பில் வெளியான தகவல்

0

கொழும்பை மையப்படுத்திய இலகு தொடருந்து போக்குவரத்துத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் மிகக் குறைவாகவே இருப்பதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இன்றைய(9.7.2026) நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போது அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், கொழும்பின் முக்கிய பகுதிகளை இணைத்து பத்தரமுல்லை வரை நீளும் வகையிலான குறித்த இலகு தொடருந்து திட்டம் குறித்து அரசாங்கம் விரிவான ஆய்வுகளை மேற்கொண்டது.

போக்குவரத்து வசதி
அதன் அடிப்படையில், அதன் தற்போதைய கட்டுமானச் செலவு மற்றும் அந்தச் சேவையைப் பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளும்போது, இத்திட்டம் பொருளாதார ரீதியில் லாபகரமானதாகவோ அல்லது சாத்தியமானதாகவோ அமையாது என்று தெரியவந்துள்ளது.

இலகு தொடருந்து திட்டத்திற்குப் பதிலாக, பொருளாதார ரீதியில் அதிக பலன் தரக்கூடிய ‘மெட்ரோ பேருந்து போன்ற மாற்று போக்குவரத்துத் திட்டங்களை முன்னெடுப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது.

பொதுமக்கள் மற்றும் நாட்டின் பொருளாதார நலனைக் கருத்தில் கொண்டே இவ்வாறான முடிவுகள் எடுக்கப்படுகின்றன.

குறைந்த செலவில் அதேவேளை வினைத்திறன் மிக்க போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும் அவர் தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.