;
Athirady Tamil News

டெங்கு பரவலைத் தடுக்க அதிரடி: 4,672 பேருக்கு எதிராக வழக்குப்பதிவு!

0

இந்த ஆண்டின் ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரையிலான காலப்பகுதியில், தங்களது இருப்பிடங்களைச் சுற்றிலும் நுளம்புகள் பெருகுவதற்கு ஏதுவான சூழலை வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ், இதுவரையில் 4,672 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

நாட்டில் டெங்கு நோய் பரவுவதைத் தடுப்பதற்காகக் காவல்துறையினரும் சுகாதாரத் துறையினரும் இணைந்து முன்னெடுத்து வரும் சிறப்பு டெங்கு ஒழிப்புத் திட்டங்கள் மற்றும் சட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கும் போதே காவல்துறை ஊடகப் பிரிவு இந்த விபரங்களை வெளியிட்டுள்ளது.

இதன்படி, நாடு முழுவதுமுள்ள 48 காவல்துறைப் பிரிவுகளை உள்ளடக்கிய வகையில் அமைக்கப்பட்டுள்ள பொதுப் பாதுகாப்புச் சபைகள் ஊடாக, டெங்கு ஒழிப்புக்கான சிரமதானப் பணிகள், விழிப்புணர்வுத் திட்டங்கள் மற்றும் சட்டத்தை நிலைநாட்டும் நடவடிக்கைகள் ஆகியவற்றைத் தீவிரமாக முன்னெடுக்குமாறு ஏற்கனவே உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகக் காவல்துறை ஊடகப் பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.

டெங்கு காரணமாக இதுவரையில் நாட்டில் 50 மரணங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.