பல்கலைக்கழகங்களில் புதிய மருத்துவ வழிகாட்டல்
இலங்கையிலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் டெங்கு நோயைக் கண்காணித்தல் மற்றும் தடுப்பது தொடர்பான மருத்துவ முகாமைத்துவ மற்றும் தரப்படுத்தப்பட்ட வழிகாட்டல் தொகுப்பு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
பல்கலைக்கழகங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் உத்தியோகபூர்வமாக நாளை (20) வெளியிடப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
பல்கலைக்கழகங்களில் டெங்கு நோயை முன்கூட்டியே கண்டறிவதற்கும், நோயாளிகளை முறையாகக் கையாள்வதற்கும், நோய் கண்காணிப்பை வலுப்படுத்துவதற்கும், டெங்கு நுளம்புகள் பரவுவதைத் தடுப்பதற்கும் முறையான நடவடிக்கைகளை அறிமுகப்படுத்துவதே இதன் நோக்கமாகும்.
அண்மைக் காலமாக டெங்கு நோய் தீவிரமாகப் பரவியதன் காரணமாக, சில பல்கலைக்கழகங்கள் தற்காலிகமாக மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.