;
Athirady Tamil News

கொழும்பில் தங்க நகைத்திருட்டு ; தமிழகத்தைச் சேர்ந்த இருவர் யாழ்ப்பாணத்தில் கைது

0

கொழும்பில் திருட்டில் ஈடுபட்ட தமிழகத்தை சேர்ந்த இருவர் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியில் கடந்த ஆகஸ்ட் மாதம் 26ஆம் திகதி வீடொன்றில் 19.25 பவுண் தங்க நகைகள் திருடப்பட்டிருந்தன.

அது தொடர்பில் வீட்டார் கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர்.

இந்நிலையில் குறித்த வீட்டில் திருட்டில் ஈடுபட்ட குற்றத்தில் தமிழகத்தை சேர்ந்த இருவரை யாழ்ப்பாணத்தில் பொலிஸார் கைது செய்துள்ளனர் கைது செய்யப்பட்ட இருவரையும் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் , அவர்களை கொட்டாஞ்சேனை பொலிசாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.