;
Athirady Tamil News

மராட்டியம், அசாமில் அடுத்தடுத்து நிலநடுக்கம்!

0

புதுடெல்லி,

மராட்டிய மாநிலம் மற்றும் அசாமில் அடுத்தடுத்து ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

மராட்டியத்தில் நிலநடுக்கம்
மராட்டியத்தின் நாசிக் பகுதியில் நேற்று காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 5.33 மணியளவில் ரிக்டர் 3.3 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது

5 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 20.401 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 73.714 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது.

அசாமில் நிலநடுக்கம்
இதனையடுத்து அசாமிலும் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் அசாமின் மோரிகன் பகுதியில் நேற்று காலை 8.17 மணியளவில் ரிக்டர் அளவில் 3.2 ஆக பதிவானதாக நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கங்களால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் உடனடியாக வெளியாகவில்லை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.