வடக்கு மாகாணத்தின் பொருளாதார மறுமலர்ச்சியில் காங்கேசன்துறை துறைமுகத்தின் மீளுருவாக்கமும் அதனூடான கப்பற் போக்குவரத்து வளர்ச்சியும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை.
இந்தியாவின் காரைக்கால் துறைமுகத்திலிருந்து காங்கேசன்துறை துறைமுகம் ஊடாக திருகோணமலை மற்றும் கொழும்பு நோக்கி முன்னெடுக்கப்படவுள்ள நேரடி பொருட்கள் கப்பற் போக்குவரத்து சேவை, வடக்கு மாகாணத்தின் வர்த்தக நடவடிக்கைகளுக்கு புதிய பரிமாணத்தை ஏற்படுத்தும்
யாழ்ப்பாணத்தில் களஞ்சியசாலைகள், குளிரூட்டப்பட்ட சேமிப்பு வசதிகள் மற்றும் தளபாட மையங்களை அமைக்கும் நிறுவனத்தின் திட்டம் வடக்கு மாகாண விவசாயிகளுக்கு பெரும் நன்மையை வழங்கும்.
இந்தியாவிலிருந்து வடக்கு மாகாணத்துக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் இனி கொழும்பு துறைமுகத்தைச் சாராமல் காங்கேசன்துறை துறைமுகத்தை நேரடியாக வந்தடையும் சூழல் உருவானால், போக்குவரத்து நேரம், கையாளும் செலவு மற்றும் தேவையற்ற தாமதங்கள் கணிசமாகக் குறையும். அதேவேளை, வணிகர்களின் முதலீட்டுச் சுழற்சியும் விரிவடைவதன் மூலம் அதன் நன்மைகள் பொதுமக்களையும் சென்றடையும் என மேலும் தெரிவித்தார்.
ஸ்மார்ட் மரைன் லங்கா நிறுவனம், கப்பல் முகவர் சேவைகள், பொருட்கள் போக்குவரத்து சேவைகள், தளபாட முகாமைத்துவம், கப்பல் மற்றும் விமான வழி பொருட்கள் கையாளல், கொள்கலன் சேவைகள், சுங்க அனுமதி மற்றும் ஒருங்கிணைப்பு சேவைகள் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை யாழ்ப்பாணத்திலிருந்தே வழங்கவுள்ளது.
இலங்கை, இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர் மற்றும் மலேசியா ஆகிய நாடுகளில் நிறுவனம் கொண்டுள்ள வலையமைப்பின் ஊடாக வடக்கு மாகாணத்தின் வர்த்தகத் தொடர்புகளை மேலும் வலுப்படுத்தும் என நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
வடக்கு மாகாணத்தின் ஏற்றுமதிப் பொருளாதாரத்தை விரிவுபடுத்துவதற்கும், காங்கேசன்துறை துறைமுகத்தை மையமாகக் கொண்ட பிராந்திய வர்த்தக வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும், வடக்கு மாகாணத்தை சர்வதேச கப்பற் போக்குவரத்து மற்றும் தளபாட வலையமைப்புடன் மேலும் வலுவாக இணைப்பதற்கும் இக்கிளை அலுவலகத்தின் ஆரம்பம் ஒரு முக்கியமான முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.
இந்நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர் ம.பிரதீபன், வடக்கு ஏற்றுமதியாளர் சம்மேளனத்தின் தலைவர் மற்றும் நிர்வாகிகள், ஸ்மார்ட் மரைன் லங்கா நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் உள்ளிட்ட நிறுவன அதிகாரிகள், வர்த்தக மற்றும் தொழில்துறை பிரதிநிதிகள், ஏற்றுமதியாளர்கள், தொழில்முனைவோர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
