;
Athirady Tamil News

ட்ரோன் கேமராவை பறக்கவிட்ட சிறுவன் கைது

0

பாதுகாப்பு அமைச்சின் அனுமதியின்றி ட்ரோன் கேமராவை பறக்கவிட்ட 16 வயது சிறுவன் ஒருவர் நேற்று (09) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விமானப்படை புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, மன்னார் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட கூட்டு நடவடிக்கையின் போதே சௌத்பார் – பனங்கட்டுகொட்டு பகுதியில் வைத்து குறித்த சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதுகாப்பு அமைச்சில் பதிவு செய்யப்படாத ட்ரோன் கேமரா பாதுகாப்பு பிரிவினரால் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சிறுவன் மேலதிக விசாரணைகளுக்காக மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.