;
Athirady Tamil News

ஆசிரியை கொலை;குற்றவாளிக்கு மரண தண்டனை

0

2016 ஆம் ஆண்டில் மொனராகலை, மாராவ கிவுலேஆரவைச் சேர்ந்த ஆசிரியையான பெத்தே ஹபுகே சோமாவதி (54) கொலை சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிக்கு, மொனராகலை மேல்நீதிமன்ற நீதிபதி சிகிரீ ஸ்ரீனித் மெண்டிஸ் விஜேசேகரவினால் புதன்கிழமை (02) மரண தண்டனை விதிக்கப்பட்டது.

மொனராகலை சொரோம்புவ பேரமண்டியவைச் சேர்ந்த ரத்நாயக்க முதியன்சேலாகே அருண சாந்த என்பவருக்கே மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

நீண்ட வழக்கு விசாரணைக்குப் பின் மரண தண்டனை
நீண்ட வழக்கு விசாரணைக்குப் பின்னர், குற்றம் சாட்டப்பட்டவர் கொலைக் குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்டதையடுத்தே இந்தத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வகுப்பை முடித்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, காட்டில் இழுத்துச் செல்லப்பட்டு அவரது சேலையால் கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

அவரை வன்புணர்ச்சி செய்யும் நோக்கத்துடன் காட்டிக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அது தோல்வியடைந்தமையால் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

பிரதிவாதிக்கு கொலைக் குற்றச்சாட்டுக்கு மேலதிகமாக வன்புணர்ச்சிக் குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டிருந்ததுடன், வன்புணர்ச்சிக் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டு, கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவராகக் குற்றவாளியாகக் காணப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.