சிக்கிமில் 16 பனிப் பாறைகளில் எச்சரிக்கை கருவிகள் பொருத்தம்
கேங்டாக்: நேபாளத்தில் பனிப்பாறை வெடிப்பால் ஏற்பட்ட பேரழிவைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சிக்கிம் மாநிலத்தில் உள்ள 16 ஆபத்தான பனிப்பாறைகளில் எச்சரிக்கை கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.
இதுகுறித்து சிக்கிம் மாநில பேரிடர் நிவாரண ஆணையர் ரின்சிங் செவாங் கூறியதாவது: நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ள பேரழிவைத் தொடர்ந்து ஏரிகள் தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. அவற்றின் நீர்மட்ட மாற்றங்களைக் கண்டறிய தானியங்கி வானிலை மையங்கள் மற்றும் முன்கூட்டியே எச்சரிக்கும் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.
பெரும்பாலான இடங்கள் வட சிக்கிமில் உள்ளதால், அங்கு நீர்மட்டம் உயர்வதை உடனடியாகத் தெரிந்து கொள்ளும் வகையில் தானியங்கி எச்சரிக்கைக் கருவிகளை அமைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு செவாங் கூறினார்