;
Athirady Tamil News

ஆசிரியர் சேவையில் இணைய காத்திருக்கும் பட்டதாரிகளுக்கு கல்வி அமைச்சின் முக்கிய தகவல்

0

பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைப்பதற்காக நடத்தப்பட்ட போட்டிப் பரீட்சையின் பெறுபேறுகள் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படுமென கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

போட்டிப் பரீட்சை
கடந்த மே 24ஆம் திகதி பட்டதாரிகளை இலங்கை ஆசிரியர் சேவையில் இணைப்பதற்கான போட்டிப் பரீட்சை நடைபெற்றிருந்தது.

ஆப்போட்டிப் பரீட்சைக்கு 1,63,433 பேர் விண்ணப்பித்திருந்தனர்.

இந்தப் பெறுபேறுகளின் அடிப்படையில் 23,000 பட்டதாரிகள் ஆசிரியர் சேவையில் இணைக்கப்படவுள்ளனர்.

இதில், அரச சேவையில் தற்போது பணியாற்றும் பட்டதாரிகளுக்காக நடத்தப்பட்ட ஆசிரியர் பரீட்சையில் தோற்றிய 15,000 பேரும், திறந்த அடிப்படையில் நடத்தப்பட்ட பரீட்சையில் தோற்றிய 8,000 பேரும் உள்ளடங்குகின்றனர்.

தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான நேர்முகப் பரீட்சைகள் எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தில் நடத்தப்படவுள்ளதுடன், ஆசிரியர் நியமனங்கள் டிசம்பர் மாதத்தில் இடம்பெறவுள்ளது.

மேலும், கல்வியியல் கல்லூரி டிப்ளோமா பெற்ற 6,500 பேரையும் ஆசிரியர் சேவையில் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நியமனங்கள் எதிர்வரும் பெப்ரவரி மாதத்தில் இடம்பெறவுள்ளன.

இவ்வாறு இணைக்கப்படும் ஆசிரியர்கள், ஆசிரியர் பற்றாக்குறை காணப்படும் தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் பணிக்கு அமர்த்தப்படவுள்ளனர்.

தற்போது நாட்டின் பாடசாலை கட்டமைப்பில் 40,000க்கும் அதிகமான ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுகின்றன என்றுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.