;
Athirady Tamil News

கூகுள் நிறுவனத்துக்கு ரூ.4,435 கோடி அபராதம்: காரணம் என்ன.?

0

டப்ளின்,

அமெரிக்காவைச் சேர்ந்த கூகுள் நிறுவனம், ஐரோப்பிய யூனியனின் பொதுத் தரவு பாதுகாப்பு விதிமுறைக்கு மாறாக, பயனர்களின் அனுமதியின்றி, அவர்களின் தனிப்பட்ட இருப்பிட தகவல்களை ரகசியமாக சேகரித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

கூகுள் நிறுவனத்தின் ஐரோப்பிய தலைமையகம் அயர்லாந்தில் உள்ளதால், அந்நாட்டின் தரவு பாதுகாப்பு ஆணையமே இந்த விசாரணையை நடத்தியது. இறுதியில், பயனர்களின், ‘வெப் ஆப் ஆக்டிவிட்டி’ எனப்படும், டிஜிட்டல் டைரி மற்றும் இருப்பிட வரலாறு மூலம் தகவல்கள் கண்காணிக்கப்பட்டு சேகரிக்கப்பட்டது தெரிய வந்தது.

மேலும், ‘ஆண்ட்ராய்டு சாதனங்களில் உள்ள இருப்பிட துல்லியத்தன்மை அம்சத்திலும் வெளிப்படைத் தன்மை இல்லை என்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, கூகுள் நிறுவனத்திற்கு, 4,435 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

ஐரோப்பிய யூனியனில் தனியுரிமை விதிகளை மீறியதற்காக, அந்நிறுவனத்துக்கு விதிக்கப்பட்ட நான்காவது மிகப் பெரிய அபராதம் இது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.