;
Athirady Tamil News

யாழில் பிரபல வெதுப்பகத்திற்கு சீல் ; பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

0

யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல வெதுப்பகத்தின் திருநெல்வேலி கிளைக்கு நீதிமன்ற உத்தரவின் கீழ் பொது சுகாதார பரிசோதகரினால் சீல் வைக்கப்பட்டுள்ளது.

குறித்த கிளையில், கடந்த 10ஆம் திகதி பொது சுகாதார பரிசோதகர் திடீர் சோதனை நடவடிக்கையை மேற்கொண்ட போது, சுகாதார குறைபாடுகளை கண்டறிந்து அதனை நிவர்த்தி செய்வதற்கு கால அவகாசம் வழங்கியிருந்தார்

சுகாதார சீர்கேடு
குறித்த கால அவகாசத்தில் அவற்றினை நிவர்த்தி செய்ய தவறிய நிலையில் , உணவு கையாளுவார்கள் மருத்துவ சான்றிதழ் பெறாதமை , சுட்டு துண்டு இல்லாமை , அச்சிடப்பட்ட தாள்களில் உணவு பொருட்களை பொதி செய்தமை , தனி நபர் சுகாதாரமின்மை உள்ளிட்ட 12 சுகாதார குறைபாடுகளுக்கு எதிராக யாழ்ப்பாணம் மேலதிக நீதவான் நீதிமன்றில் பொது சுகாதார பரிசோதகரினால் , வழக்கு தொடரப்பட்டது

வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொண்டதை அடுத்து ஒவ்வொரு குற்றத்திற்கு தலா 3 ஆயிரம் ரூபாய் வீதம் 12 குற்றங்களுக்கும் 36 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் விதித்த மன்று , சுகாதார சீர்கேட்டினை சீர் செய்யும் வரை கிளைக்கு சீல் வைக்குமாறு பொது சுகாதார பரிசோதகருக்கு மன்று கட்டளையிட்டது

நீதிமன்ற கட்டளையின் பிரகாரம் பொது சுகாதார பரிசோதகரினால் கிளைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.