;
Athirady Tamil News

உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் அவர்களின் மகன் காலமானார்

0

உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர், பழ. நெடுமாறன் அவர்களின் இளைய மகன் திரு. மாணிக்கம் நெடுமாறன் (57) அவர்கள் ஆஸ்ரேலியாவின் மெல்பர்ன் நகரில் நேற்று (01) காலை இயற்கை எய்தினார்.

மெல்பர்ன் நகரில் கடந்த பல ஆண்டுகளாகத் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரிந்துவந்த மாணிக்கம் நெடுமாறன், இளம் வயதிலேயே புத்த மதத்தைத் தழுவித் துறவு பூண்டு புத்த துறவியாக வாழ்ந்துவந்தார்.

உடல்நலக் குறைவு
கடந்த ஒரு மாதமாக உடல்நலக் குறைவுக்காகச் சிகிச்சை பெற்றுவந்த அவர், இந்திய நேரப்படி இன்று காலை 8.45 மணிக்குக் காலமானார்.

அவருடைய இறுதிச் சடங்குகள் புத்த மத வழக்கப்படி, மெல்பர்ன் நகரிலேயே நடைபெறும்.

பழ. நெடுமாறனின் பாஸ்போர்ட் முடக்கப்பட்டிருப்பதால் இறுதிச் சடங்கில் பங்கேற்க அவரும் அவருடைய மனைவியும் செல்லவில்லை எனக் குடும்ப வட்டாரங்கள் தெரிவித்தன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.