;
Athirady Tamil News

கடுமையான மின்னல் தாக்கம் குறித்து பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

0

கடுமையான மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் ‘அம்பர்’ எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இதற்கமைய, வடமேற்கு, மத்திய, சபரகமுவ, ஊவா, மேல் மற்றும் வடமத்திய மாகாணங்கள் மற்றும் காலி, மாத்தறை, மன்னார் ஆகிய மாவட்டங்களில் கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பகுதிகளில் பல இடங்களில் கடுமையான மின்னல், இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமான மற்றும் குறிப்பிட்ட சில பகுதிகளில் பலத்த காற்றும் வீசக்கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மின்னல் தாக்கத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.