;
Athirady Tamil News

மெட்ரோ பேருந்துகள் முன்பதிவு தொடர்பில் சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவல்கள் ; வெளியான முக்கிய தகவல்

0

மெட்ரோ பேருந்துகளை தனிப்பட்ட பயன்பாட்டிற்காக முன்பதிவு செய்ய முடியும் என சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவல்கள் முற்றிலும் தவறானவை என லங்கா மெட்ரோ டிரான்சிட் நிறுவனம் பொதுமக்களுக்கு தெரிவித்துள்ளது.

மெட்ரோ பேருந்துகளை தனிப்பட்ட தேவைகளுக்காக வாடகைக்கு விடுவதற்கோ அல்லது எந்த வகையிலும் முன்பதிவு செய்வதற்கோ இதுவரையில் எந்தவித தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை என அந்த நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.

எனவே, இதுபோன்ற போலி தகவல்களை நம்பி ஏமாற வேண்டாம் என்றும், மெட்ரோ பேருந்து சேவைகள் தொடர்பான துல்லியமான மற்றும் அதிகாரப்பூர்வமான தகவல்களுக்கு லங்கா மெட்ரோ டிரான்சிட்டின் அதிகாரப்பூர்வ தகவல் தொடர்பு வழிகளை மட்டுமே நாடுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.