இன்று நாடு முழுவதும் மதுபான விற்பனை நிலையங்கள் மூடல்
உலக மதுவிலக்கு தினத்தை முன்னிட்டு இன்று (3) நாடு தழுவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் மூடப்பட்டிருக்கும் என இலங்கை மதுவரி திணைக்களம் அறிவித்துள்ளது.
ஆண்டுதோறும் ஒக்டோபர் 3 ஆம் திகதி சர்வதேசமதுவிலக்கு தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது.
மதுபானப் பழக்கத்தினால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், மதுப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவது அல்லது முழுமையாகத் தவிர்ப்பதை ஊக்குவிப்பதுமே இந்த நாளின் முதன்மை நோக்கமாகும்.