;
Athirady Tamil News

சவர்மா உட்கொண்ட 14 மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி

0

சவர்மா உட்கொண்ட 14 மாணவிகள் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கோட்டக் கல்வி அலுவலகப் பிரிவுக்குட்பட்ட பிறைந்துரைச்சேனை பகுதிலுள்ள பாடசாலை ஒன்றில் எட்டாம் தரத்தில் கல்வி கற்கும் மாணவிகள் வெள்ளிக்கிழமை (02) ஒன்று சேர்ந்து சவர்மா ஓடர் செய்து உட்கொண்டுள்ளனர்.

மாணவிகள் உட்கொண்ட சவர்மா ஒவ்வாமை ஆனதால் மாணவிகளுக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தில் ஏற்பட்ட உடல்நலக் குறைவால் 14 மாணவிகள் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அதில் ஒரு மாணவி மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பிலான கள ஆய்வினை வாழைச்சேனை மத்தி சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.ரீ.எம்.நஜீப்கான் தலைமையிலான பொதுச் சுகாதார பரிசோதகர் குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.