இரவு நேரத்தில் உத்தரகாண்டை உலுக்கிய நிலநடுக்கம்
இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தின் சமோலி பகுதியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது 4.9 மெக்னிடியுட் அளவாக பதிவாகியுள்ளதாக இந்திய தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
நேற்று இரவு 10:23 அளவில் நிலப்பரப்பில் இருந்து சுமார் 13 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் இந்தியாவின் தலைநகர் டெல்லி, நோய்டா, குர்கான் உள்ளிட்ட தேசிய பிராந்தியங்களிலும் (Delhi-NCR) உணரப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.