யாழில். 20 இலட்சம் ரூபா பெறுமதியில் 833 வீடுகளை நிர்மாணிப்பு
யாழ்ப்பாணத்தில் தமது வீடமைப்புப் பணிகளை முழுமையாகப் பூர்த்தி செய்த பயனாளிகளில் முதற்கட்டமாக 257 பேருக்கு, உலக வாழ்விட தினத்தை முன்னிட்டு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இந் நிகழ்வில், உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ. தர்ஷினி, யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளர் திரு. எஸ். கபிலன், பிரதேச செயலாளர்கள், உதவித் திட்டமிடல் பணிப்பாளர்கள், வீட்டுத்திட்டப் பயனாளிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
